Tuesday, August 30, 2011

Facebook, Twitter மற்றும் சமூக இணையதளங்களில் உங்கள் பதிவுகள் தானாகவே இணைய

உங்கள் பதிவுகள் சமூக தளங்களில் தானாக இணைய, முதலில் உங்கள்  RSS Feed-ஐ கண்டறிய வேண்டும். பிளாக்கரில் உங்கள் வலைத்தள முகவரிக்கு பின் /rss.xml (எ.கா:http://tamil121.blogspot.com/rss.xml) என்று சேர்த்தால் RSS Feed வரும். 


பின்பு dlvr.it இணையத்தளத்திற்கு சென்று புதிதாக உங்களில் ஈமெயில் முகவரி கொடுத்து பதிந்து கொள்ளுங்கள். உங்கள் ஈமெயில் முகவரிக்கு dlvr.it அனுப்பும்  ஈமெயிலை திறந்து உங்கள் ஈமெயில் முகவரியை உறுதி செய்தபின் தான் RSS Feed-ஐ அதில் இணைக்கமுடியும். dlvr.it உள் சென்ற பின் இடதுபக்கம் இருக்கும் My New Route என்பதன் கீழே இருக்கும் Sources-ல் இருக்கும் +add கிளிக் செய்தால், திறக்கும் Source Editor பெட்டியில் New -ஐ செலக்ட் செய்யவும். உங்களின் RSS Feed-ஐ Feed URL-ல் இணைத்து Save Sources பட்டனை கிளிக் செய்யவும். இந்த முறையில் உங்களில் அனைத்து இணையதளங்களில் RSS Feedகளையும் வரிசையாக இணைக்கலாம்.

பிறகு வலதுப்பக்கம் இருக்கும் Destinations-ல் இருக்கும் +add கிளிக் செய்தால், திறக்கும் Destination Editor பெட்டியில் வரிசையாக இணையதளங்களில் பட்டன்கள் இருக்கும். அந்த இணையதளங்களில் நீங்கள் உங்கள் பதிவுகளை தாமாக இணைக்க உங்களுக்கு அக்கௌண்ட் இருக்க வேண்டும். இல்லையென்றால் புதிதாக அந்த தளங்களில் இணைந்து கொள்ளவும். உங்களுக்கு தேவையான சமூக தளங்களில் New -ஐ செலக்ட் செய்யவும். அதில் Start Authorization பட்டனை கிளிக் செய்து உங்கள் யூசர்நேம், பாஸ்வேர்ட் கொடுத்து, இணைக்க அனுமதி கொடுத்தவுடன் அந்த தளம் உங்கள்  Destinations பெட்டியில் சேரும். இவ்வாறு வரிசையாக  அதில் உள்ள சமூக தளங்களில் யூசர்நேம், பாஸ்வேர்ட் கொடுத்து இணையலாம்.அவ்வளவுதான். 

இனி நீங்கள் பதிவிட்ட 15 நிமிடத்திற்குள் உங்கள் பதிவு தானாகவே ட்விட்டர், பேஸ்புக், மைஸ்பேஸ், Buzz(கூகுள் பிளஸில் Buzz பிரிவு இருக்கிறது), Tumblr, LInkedin, Statusnet இணையதளங்களில் இணையும்.

dlvr.it உங்கள் பதிவு முகவரிகளை சுருக்கி அனுப்புகிறது. மேலும் இந்த இணையதளத்தின் மெனுவில் இருக்கும் Stats மூலம் உங்கள் பதிவுகளின் புள்ளிவிவர தகவல்களையும் பெற்று கொள்ளலாம். மெனுவில் இருக்கும் Post மூலம் இதிலேயே செய்திகளை நேரடியாக எழுதி உங்களில் சமூக தளங்களில் பகிர்ந்தும் கொள்ளலாம்.

 Destinations பெட்டிக்கு மேல் இருக்கும் Active பட்டனை கிளிக் செய்து, இந்த சேவையை நிறுத்தியும் வைத்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment