Thursday, October 28, 2010

சிம்பிள் சிக்கன் கிரேவி

சுலபமாக செய்யச்கூடிய இந்த சிக்கன் கிரேவி நல்ல ருசியாகவும் இருக்கும்.



தேவையான பொருட்கள்:

             சிக்கன் -  1/2 கிநல்லெண்ணெய் -  50மி
             தேங்காய்
  -  1/2 மூடி துருவியது
             கடுகு உளுந்து  -  1 தேக்கரண்டி
             கருவேப்பிலை
  -  சிறிது
             தக்காளி சிறியது - 1
             மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
             மல்லிப்பொடி - 2
             மஞ்சள்தூள் - சிறிதளவு
             உப்பு - தேவையான அளவு




செய்முறை:

     வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு உளுந்து போடவும். அது வெடித்ததும் சிறிய வெங்காயம் பொடியாக நறுகியதை அதில் போட்டு வதக்கவும். பின்பு சிறிது கறிவேப்பிலை அதில் போட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். 

     தக்காளி நன்றாக வதங்கியவுடன், அதனுடன் சுத்தம் செய்த சிக்கனை போட்டு நன்றாக வதக்கவும். பிறது அதனுடன் மிளகாய் பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள் சிறிது போட்டு வதக்கி சிறுது நேரம் கழித்து உப்பு சேர்க்கவும். உப்பு சேர்ந்தவுடன் நன்றாக வதக்கி பின் 1 1/2 டம்ளர் தண்ணீர் அதனுடன் சேரக்கவும். பிறது தண்ணீர் வற்றும் வரை சிக்கனை வேகவிடவும். 

     தண்ணீர் வற்றியவுடன் தேங்காய் துருவலை போட்டு கிளர வேண்டும். பிறகு இரண்டு நிமிடம் கழித்து இறக்கினார் சுவையான சிம்பிள் சிக்கன் கிரேவி தயார். இதனை சப்பாத்தியோடும், தேங்காய் குழம்பு(சொதி), சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.


1 comment: