Tuesday, November 2, 2010

உங்கள் வலைதளத்தின் நீளமான முகவரியை சுருக்கலாம் (Short your URL)

பொதுவாக நமது வலைதளத்தின் முகவரி (உதாரணமாக tamilulagam2010.blogspot.com) சற்று பெரியதாக இருக்கிறது. இந்த பெரிய முகவரியை டைப் செய்வதை விட அதற்கு எளிதான ஒரு சிறிய வலைதள முகவரியை கொடுத்து அதை டைப் செய்து நமது வலைதளம் திறந்தால் நன்றாக இருக்கும். அதற்கு கூகுளில் எளிய வழி ஒன்று உள்ளது.



           இந்த முகவரிக்கு சென்று Paste your long URL here: என்ற இடத்தில் உங்கள் வலைதளத்தின் முகவரியை கொடுத்தால் அருகிலேயே சிறிய முகவரியாக மாற்றித்தரும். இனி அந்த முகவரியை கொடுத்தால் உங்கள் வலைதளம் திறக்கப்படும்.

           கூகுளை விட வலைதள முகவரியை சிறப்பாக சுருக்கும் வேறொரு தளமும் உள்ளது. கூகுளில் அதில் வரும் சுருக்க வலைதள முகவரியை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இந்த தளத்தில் நீங்கள் நினைக்கும் சுருக்க வலைதள முகவரியை தரலாம்.

அதன் முகவரி http://bit.ly/

           இந்த முகவரிக்கு சென்று முதலில் அதில் உறுப்பினர் (Sign Up) ஆகவேண்டும். Shorten your links and share from here என்ற இடத்தில் உங்கள் வலைத்தள முகவரியை கொடுத்து பின் அதற்கு கீழ் இருக்கும் Customize என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். 

           அதில் ”bit.ly/” என்ற முகவரிக்கு அருகில் நீங்கள் விரும்பிய பெயரை சேர்த்து, Shorten என்ற பட்டனை க்ளிக் செய்தால், உங்களுக்கு தேவையான  வலைதள முகவரி சுருக்கமான பெயரில் கிடைக்கும். அந்த பெயர் ஏற்கனவே பெறப்பட்டிருந்தால் வேறு பெயர் கொடுத்து முயற்சிக்கவும்.

           இந்த சுருக்கப் பெயரை உங்கள் வலைதளத்தில் குறிப்பிட்டால், உங்கள் வலைதளத்திற்கு வருபவர்கள் எளிதாக டைப் செய்து வருவார்கள்.

           இன்னும் இதைபோல் வலைதள முகவரியை சுருக்குவதற்கு, பல வலைதளங்கள் உள்ளன. முயற்சித்து பார்க்கவும்.






இன்னும் சில...


2 comments:

  1. தகவலுக்கு நன்றி சகோதரம்...

    ReplyDelete
  2. உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் சார்.

    ReplyDelete