Monday, August 2, 2010

தமிழ் மொழியின் வயது என்ன?


தமிழ் மொழியின் வயது பொதுவாக இதுவரையில் கிடைத்த தமிழின் பழமையான நூலான தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை கொண்டு கி.மு 500 ம் என்று அறிய படுகிறது.
ஆனால் அதற்கு முந்தைய ஆதிகால தமிழ் எழுத்துருக்கள் எகிப்து, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் கண்டறியப் பட்டுள்ளன. (பல பழமையான ரோம நாணயங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் கண்டறியப் பட்டுள்ளது) மேலும் கி.மு 3000 தில் ஹரப்பாவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) தமிழ் எழுத்துக்கள் பயன் படுத்த பட்டதையும், தமிழ் கடவுளான முருகரை வழி பட்டதையும் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதற்கு முந்தைய கால நகரமான பூம்பூகார் கடலால் சூழ பட்டதை முன்பு ட்ராய் போல ஒரு கட்டு கதையாகவே நம்பப் பட்டு வந்தது. ஆனால் பூம்புகார் நகரம் இருந்தது உண்மை என கண்டறிய பட்டுள்ளது. அதன் காலம் குறைந்த பட்சம் கி.மு 9500 . இது கடைசி பனி காலமான (லாஸ்ட் ஐஸ் ஏஜ்) கி.மு 10000 காலத்தை நெருங்கியது. அதாவது பூமி உருவான பின்பு அதிக வெப்பமான அது குளிர்த்து முழுவதுமாக பனியால் சூழ பட்டு இருந்து பின் அனைத்து பனியும் உருகி மிக பெரும் கடலான (துருவ பகுதியை தவிர) கடைசி காலம்.

தமிழ் மொழியின் வரலாறு தெரியாமல் போன காரணம் தமிழ் மொழியின் எழுத்துக்கள் பெரும்பாலும் களிமண் ஏடுகள் மற்றும் பனை ஓலைகளில் எழுத பட்டதால் களிமண் ஏடுகள் காலப்போக்கில் அழிந்தன; முறையாக பராமரிக்க படாத பனை ஏடுகள் கரையான்களாலும் , மூடநம்பிக்கையின் காரணமாக ஆற்றிலும் வீச பட்டன.


No comments:

Post a Comment