Wednesday, August 4, 2010

சுலபமான + சிக்கனமான +ருசியான சேமியா பருத்தி பால்

இது மிகவும் ருசியான சேமியா பருத்தி பால். உடல் நலத்திற்கும் ஏற்றது, (சர்க்கரை நோயாளிகளை தவிர). சுலபமானதும், சிக்கனமானதும் கூட. 25 ரூபாயில் நான்கு பேருக்கு செய்து விடலாம்.  தவறாமல் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:- 
100 கிராம் -  பருத்தி விதை (நயமானதாக பார்த்து வாங்கவும்)
50 கிராம்  - வறுத்த சேமியா
1 / 2  மூடி  -  தேங்காய்
1 / 4 KG  மண்டவெல்லம் 
 ஏலம், சுக்கு தேவைகேற்ப
 உலர்திராட்சை,முந்திரி தேவைகேற்ப

செய்முறை:-
           பருத்தி விதையை முதல் நாள் நன்றாக ஊற வைத்து, மறுநாள் நன்கு கழுவி விடவும். பின் பருத்தி விதையை ஆட்டி வடிகட்டி முதல் பால், இரண்டாம் பால் எடுத்து கொள்ளவும். அதில் முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் இந்த பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதன் பின் வறுத்த சேமியாவை நன்றாக உடைத்து அதனுடன் சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும். பிறகு வெள்ளத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு வடுகட்டி அதனையும் இந்த கலவையுடன் சேர்க்கவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

                    ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், அதில் உலர்திராட்சை, முந்திரி சேர்த்து லேசாக வறுத்து பின், அதனுடன் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும். இளம் பொன்னிறம் வரும் வரை வறுத்து பின் அதை பருத்தி பால்  கலவையில் கொட்டி நன்கு கிளறவும். பின் ஏலம், சுக்கு தட்டி போட்டி ஒரு கொதி வரும் போது இறக்கினால் ருசியான சேமியா பருத்தி பால் தயார்.



2 comments:

  1. "பின் பருத்தி விதையை ஆட்டி முதல் பால், இரண்டாம் பால் எடுத்து கொள்ளவும்"

    ஆனந்தா
    மிக்சியை பயன் படுத்தி பால் எடுக்களாமா?

    ReplyDelete
  2. தாராளமாக மிக்சியை பயன் படுத்தலாம்

    ReplyDelete