Thursday, August 5, 2010

மிக சுலபமான சுவையான மைதா குலோப் ஜாமூன்

மைதா குலோப் ஜாமூன் மிக எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டே சுலபமாக செய்ய கூடியது. சுவை பாக்கெட்களில் கிடைக்கும் குலோப் ஜாமூன் போலவே இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

மைதா -  1/4 கிலோ
சோள மாவு - 2 மேஜை கரண்டி
சீனி  - 1/4 கிலோ
உப்பு – 1 சிட்டிகை
வனஸ்பதி - 50கி
எண்ணெய் பொரிப்பதற்கு ஏற்ப
ஏலக்காய்  - 5
கேசரி பவுடர் 1 சிட்டிகை

செய்முறை:-
     மைதா, சோள மாவு, 1 டீஸ்பூன் சீனி, 50கி வனஸ்பதி, 1 சிட்டிகை உப்பு, சுடுதண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, ½ மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன் நிறமாக பொரித்தெடுத்து நன்றாக ஆறவிடவும்.

     இன்னொரு அகண்ற பாத்திரத்தில் 1/4 கிலோ சீனி, 1 சிட்டிகை கேசரி பவுடர், ஏலக்காயை பொடியாக்கி அதையும் சேர்த்து கொதிக்க வைத்து 1 கம்பி பதத்திற்கு முன்பாக இறக்கி விடவும். ஆறிய குலோப் ஜாமூன் உருண்டைகளை சீனி பாகில் போடவும். மறுநாள் சுவையான மைதா குலோப் ஜாமூன் ரெடி.

No comments:

Post a Comment