Sunday, May 15, 2011

ஜெயலலிதா முதல்வரான பின் தமிழகத்தில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்

5 ஆண்டுகளுக்கு
அறிக்கை (அக்கப்)போர்
முதல்வரனான பின் என்ன செய்வார் ஜெயலலிதா?

ஜெயலலிதா முதல்வரான பின் தமிழகத்தில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்திமுக ஆட்சியில் இருந்து தப்பிக்க அதிமுக -வை தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். ஏற்கனவே நம்மால் மீண்டு்ம் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது என்று 2006-ல் தூக்கி  எறியப்பட்டவர் தான் ஜெயலலிதா.
அவரது செல்வாக்கு அவர் எடுத்த நான்கரை ஆண்டு ஓய்வால் சரிந்திருக்கும் என்று நினைந்திருந்த நிலையில், திமுக எதிர்ப்பில் மக்கள் அவருக்கு பேராதவரவை வழங்கி இருக்கின்றனர்.

இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக ஆகும் அவர் செய்யப்போதும் மாற்றங்கள் என்னவென்றால், ஆட்சியில் அமர்வதற்கு முன்பே சட்டமன்ற வளாகத்தை பழைய இடத்திற்கே மாற்றியமைக்கிறார்கள். தேவையில்லாமல் சட்டமன்ற கட்டிடத்தை கட்டிய விளைவை கருணாநிதி அல்ல, வரி கட்டிய மக்கள் தான் அனுபவிப்பார்கள்.

முந்நாள் முதல்வர் கருணாநிதி தனது அடைமொழியான ”கலைஞர்” என்பதனைக் கொண்டு காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்பது போல நிறைய (நல்ல/மோசமான) திட்டங்களை தீட்டியிருக்கிறார் கலைஞர். அதை கலைஞர் என்று பெயர் வைத்த காரணத்திற்காக அந்த (முக்கியமாக நல்ல)திட்டங்கள் கைவிடப்படும்.

அதன் கைவிடப்படும் வேகம் நம்மால் கணிக்க முடியாது. அதன் கோப்புக்கள் கையொப்பம் இடப்படாமலே தலைமை அலுவகத்தில் தூங்கும். 

முன்னாள் முதல்வர் இன்றைய
முதல்வரின் காலில்...
இந்த விவகாரத்தில் கருணாநிதியை மன்னிக்க முடியாது. எப்படியிருந்தாலும் தமிழக மக்கள் 5 ஆண்டிற்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் கொண்டு வருகிறார்கள். அந்த 5 ஆண்டிற்குள் இவர் செய்யும் சேட்டைகள், பள்ளிப்புத்தகங்களி்ன் பின்புறம் மற்றும் பேருந்துகளின் உள்புறம் என மாநகராட்சி கழிப்பறை உட்பட அனைத்திலும் இவரின் தத்துப்பித்து தத்துவங்கள், ரேஷன் கடை எண்ணெய் பாக்கெட்டுகளில் இருந்து மாணவர்களின் பஸ்பாஸ் வரை தாத்தாவின் சிரித்த முகம், எந்த கோணங்கி திட்டமாக இருந்தாலும் அதற்கு இவரது பெயர். மொத்தமாக அனைத்திலும் வாக்களிக்கும் காலங்களிலேயே கருப்பு பூசப்பட்டுவிட்டது.

மொத்தமாக அரசு கஜானாவை காலி செய்து, கடனாக பல ஆயிரங்கள் கோடிகள் தமிழக அரசே திவாலாகும் நிலையை வைத்து விட்டு சென்றிருக்கிறது திமுக அரசு. இதிலிருந்து மீட்க மீண்டும் கசப்பு மருந்து மக்களுக்கு தான் (ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக மாட்டு ஊசியும் போடப்படும்).

முதலாக ஜெயலலிதா செய்யப்போவதாக நினைப்பது அரசு கேபிள் டிவி. மதுபான கடைக்களை டாஸ்மாகிடம் ஒப்படைத்தது போலவே கேபிள் டிவியையும் சன் நிர்வாகத்தாரிடம் இருந்து பறித்து அரசின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் போகிறார்கள். இதில் எந்த கேபிள் ஆப்பரேட்டர்களுக்கும் பாதிப்பு இருக்காது. மாறாக பாதிக்கப்பட போவது சன் நிர்வாகத்தாரும், சில தனியார் எம்.எஸ்.ஓ-களும் தான். மக்களுக்கு கேபிள் கட்டண குறைவும், அரசிற்கு வருமானமும் கிடைக்கும். சன் நிர்வாகத்தார் இனி டிஷ் விற்பனையில் முழு மூச்சாக இறங்குவார்கள். அதனால் அதன் கட்டணமும் குறைய வாய்ப்பிருக்கிறது.

இலவச மின்சாரம் மற்றும் மின் சிக்கனத்தை நடைமுறைப்படுத்தாதால் நட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் மின் துறையை நிர்வாக ரீதியாக மூன்றாக மாற்றியிருக்கிறார் கருணாநிதி. இது மறுபடியும் ஒன்றாக ஆகலாம். மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதி.

ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் விலையை தேர்தலின் காரணமாக சற்று குறைத்துள்ளார். இதனையும் சேர்த்து அனைத்து பொருட்களின் விலையும் உயர்த்தப்படலாம். மீண்டும் ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாகலாம்.

புதிதாக பேருந்துகளை விட்டு கட்டணத்தையும் இப்போதுதான் உயர்த்தியுள்ளார் கருணாநிதி. அதனை குறைக்கமாட்டார் ஜெயலலிதா. பேருந்து வாங்கிய கடனை அடைக்க வேண்டுமானால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம்.

அநேகமாக அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்கவோ, போனஸ் உயர்வு கேட்கவோ மாட்டார்கள். அப்படியே கேட்டு கிடைக்கவிட்டாலும் போராட்டத்தில் இறங்க மாட்டார்கள். அனுபவம் இருக்குமல்லவா!

அனைத்து முந்தைய திமுக ஆட்சியின் திட்டங்களிலும் ஒவ்வொரு ஊழல் வழக்கு தொடரப்படும். ஆனால் கருணாநிதி கைது செய்யப்பட மாட்டார். ஏனென்றால் 2016-ல் திமுக ஆட்சி தானே.

தமிழக திட்டங்களுக்கெல்லாம் ஜோதிடர் தான் நாள் சொல்வார்

காவல்துறை வழக்கம் போல ஆளுங்கட்சிக்கு சாதகமாக வேலை செய்யும். ரவுடிகள் என்கவுன்டர் அதிகரிக்கும். அதிமுக வார்டு மெம்பருக்கு கூட காவல் துறை அதிகாரியை விட அதிகாரம் கூடும். அதிமுக காரர்கள் ஜெயலலிதா காலில் போட்டி போடுவர். 

கருணாநிதி சட்டசபைக்கு வருவது சந்தேகம். ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் போதே, மைனாரிட்டி திமுக அரசு என்பர். இப்போது எதிர்க்கட்சி அஸ்தஸ்து கூட இல்லை. ஸேம் ஸேம் பப்பி ஸேம்!

அழகிரி வழக்குகள் தூசிதட்டப்பட்டு அவர் கைதாகலாம், கூடவே அவர் ஜால்ராக்களும்.

5 வருடங்களில் கருணாநிதி செய்த தவறுகளுக்காக தண்டனை கொடுத்தாகி விட்டது. இனி நமது முறை.

No comments:

Post a Comment