Saturday, May 21, 2011

முக்கிய அறிவிப்பு: உங்கள் தளத்தை ரீடைரக்ட் செய்யும் ஓட்டுப்பட்டை

இது உங்களது தளத்திற்கு தேவையில்லாத செய்தியாகக்கூட இருக்கலாம். http://www.ta.tamilers.com/ என்றொரு இணையதளம் இண்ட்லி போல புதிதாக துவங்கி செயல்பட்டு வந்தது. அந்த இணையதளம் அறிவிப்பின்றி தற்போது ஆங்கில விளம்பர இணையப்பக்கமாக மாற்றப்பட்டுள்ளது.


அதன் ஓட்டுப்பட்டை இணைக்கப்பட்ட அனைத்து ப்ளாக்குகளையும் ரீடைரக்ட் செய்து ஆங்கில விளம்பர இணையப்பக்கத்திற்கு கொண்டு செல்கிறது. இதன்மூலம் www.ta.tamilers.com ஓட்டுப்பட்டை இணைக்கப்பட்ட ப்ளாக்குகளை காண இயலாது. எனவே அந்த ஓட்டுப்பட்டையை உங்கள் ப்ளாக்கில் இருந்து நீங்கி விடவும்.

அதை HTML-ல் சேர்த்திருந்தால் டாஷ்போர்ட் சென்று, வரிசையாக Design >>  Edit HTML செல்லவும். அதில் Expand Widget Templates -ல் டிக் செய்யவும். <script src='http://www.ta.tamilers.com/evb/button.php' type='text/javascript'/> என்ற வரியை Ctrl+F அழுத்தி தேடி, அழித்துவிட்டு SAVE TEMPLATE என்பதை அழுத்தவும்.

No comments:

Post a Comment