Saturday, May 7, 2011

நடிகர் எம்.ஆர்.ராதாவின் ஜெயி்ல் குறிப்புகள்

நேற்று சாதம் மூடியிருந்த பழைய (வாரமலர்) காகிதத்தில் இருந்து எம்.ஆர்.ராதா ஜெயிலில் இருந்தபோது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம் பற்றிய கட்டுரையை படித்தேன்.

அதில்-
ஜெயிலில் நானே சமைச்சுகுவேன். குலோம் ஜாமூன், ஜாங்கிரி, இட்லி எல்லாம் பண்ணிக்குவேன். என் கூட டோன்ட்ஷே என்ற பிரஞ்சுக்கார கைதி இருந்தார். இட்லியை மட்டும் அவருக்குக் கொடுப்பேன். டோன்ட்ஷே நான் செய்த கொடுத்த இட்லியைப் புகழ்ந்து அவருடைய சம்சாரத்துக்குக் கூட லெட்டர் போட்டார்.

என் இட்லிக்குக் கூலியா எனக்கு அவர் சில பிரெஞ்சு வார்த்தைகளை மட்டும் சொல்லிக் கொடுத்தார். திட்டுறதுக் சில வார்த்தைகளை மட்டும் அவர்கிட்டே கேட்டுக் கத்துக்கிட்டேன். அவங்க நாட்டை பற்றி நான் கேட்குறதுக்கு பொறுமையா பதில் சொல்வார்.

”வக்கீல்களே ஜட்ஜா வர்றது சரியா?”ன்னு அவர்கிட்டே கேட்டேன்.

”அதுதானே வழக்கம்?” என்றார் அவர்.

”உங்க நாட்டிலேயும் அப்படித்தானா?” என்றேன்.

”ஆமா”ன்னார்.

”முப்பது வருஷமா பொய் சொல்றதையே பிழைப்பா கொண்ட ஒரு வக்கீல், பதவி உயர்வுங்கிற பேரிலே ஜட்ஜ் ஆனதும், எல்லாரும் அவரைக் கடவுளுக்கு சமம்ன்னு (மை லார்டு)சொல்றாங்களே, இது நியாயமா?”ன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் பேசவே இல்லை.

நானும் இதைப்பற்றி சரி என்று யோசித்தபோது, பகுத்தறிவு ”பிறகு டவாலியவா ஜட்ஜ் ஆக்க முடியும்?” என்றது.

அதைவிடக் கொடுமை இன்று காலை நடந்தது. சன்டிவி டாப்டென் மூவிஸில் நான் முதலிடத்தில் எதிர்பார்த்த வானம், கோ படங்கள் முறையே மூன்றாம், இரண்டாம் இடங்களில் இருந்தன. 

முதலிடம் எதற்கு என்று பார்த்தால் ”மாப்பிள்ளை” என்று போட்டார்கள். சராசரி பொழுதுபோக்கு படமாக கூட இல்லாத ”மாப்பிள்ளை”, சன்டிவி வெளியீடாக இருந்ததால் பத்தாவது இடத்தில் வரவேண்டியது ஒன்றாம் இடத்திற்கு வந்திருக்கிறது. 

”காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு”

1 comment:

  1. சிந்திக்க வைக்கும் தகவல். நன்றி.

    ReplyDelete